பணியில் சேர்ந்த சக காவலரின் குடும்பத்திற்கு 25.14 லட்சம் நிதி உதவி… நெகிழவைத்த சம்பவம்…

Default Image

சிறுநீரக கோளாறு காரணமாக இறந்த, தலைமை காவலர் குடும்பத்திற்கு, அவருடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள், 25.14 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர்.

சென்னை, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்தவர் சரவணகுமார், வயது 37. இவர், சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த   ஆகஸ்ட் 18ல் உயிரிழந்தார். இவருக்கு, இந்துமதி என்ற மனைவியும்,  கோபிகா, 11, பிரியங்கா, 9, என, இரண்டு மகள்கள் உள்ளனர். தமிழக காவல் துறையில், 2003ல், இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த சரவணகுமார். இவரது குடும்பச் சூழலை அறிந்த, சரவணகுமாருடன் பணியில் சேர்ந்த, 5,000 காவலர்கள்  ‘வாட்ஸ் ஆப்’ குழு ஒன்றை துவங்கி, 25.14 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர். அதில், 20 லட்சத்து, 90 ஆயிரத்து, 618 ரூபாய்க்கு, சரவணகுமாரின் இரு மகள்களின் பெயரில், எல்.ஐ.சி., பாலிசியாக காப்பீடு செய்து செலுத்தினர். மீதமுள்ள, 4 லட்சத்து, 23 ஆயிரத்து, 387 ரூபாயை, ரொக்கமாக, சரவணகுமாரின் மனைவி மற்றும் மகள்களிடம், சென்னை, வேப்பேரியில், காவல்துறை கண்காணிப்பாளர் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வாயிலாக, நேற்று வழங்கினர்மேலும், மூவர் பெயரிலும், 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடும் எடுத்துக் கொடுத்தனர். தன்னுடன் பணியில் சேர்ந்த சக காவலரின் குடும்பத்தை காப்பாற்ற, உடன் பணியில் சேர்ந்த அனைவரும் சேர்ந்து  எடுத்த முயற்சிக்கு, கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்