முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழகத்தின் மின்நிறுவுதிறன் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றும் என்றும் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பது பற்றிய அறிவிப்புகள் வெளியிட்ட அவர், பல்வேறு மாவட்டங்களில் 5 ஆயிரத்து 68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார். புதிய எரிசக்தி கொள்கை உருவாக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
ஊரகப் பகுதிகளில் ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும், 500 புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்கள் கட்டப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார். தமிழ்நாடு ஊரகச் சாலைகள் திட்டத்தின் கீழ், 5 ஆயிரத்து 500 கிலோமீட்டர் நீள ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும், என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
ஊரகப்பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் 100 கோடி ரூபாயில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நடப்பாண்டில் 11ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கடன், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு 49 நகரங்களில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…