ஜூலை 24ம் தேதி மகளிர் உரிமைத் தொகை முகாம் – மேயர் பிரியா அறிவிப்பு

MayorPriya -chennai

சென்னையில் ஜூலை 24ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடங்குகிறது. 

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான தகுதியான குடும்ப தலைவிகளை அடையாளம் காணும் முகாம் சென்னையில் ஜூலை 24 முதல் தொடங்கும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

அதன்படி, 3523 முகாம்கள் அமைக்கப்பட்டு பணிகள் துவங்க உள்ளது. பள்ளி கூடங்கள், சமுதாய நல கூடங்கள், அரசு அலுவலகங்கள், இரவு காப்பகங்கள் என முகாம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் மூலம் பயோமெட்ரிக் முறையில் பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படும்.

மேலும், பயனாளிகளின் விவரங்களை சேகரிக்கும் முகாம்களுக்கான ஊழியர்கள், முகாம்களில் பணியாற்ற பொறுப்பு அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர் உள்ளிட்ட ஊழியர்களும் நியமனம் செய்யப்படுவுள்ளது.

இதற்கிடையில், இந்த திட்டம் தொடர்பாக தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, தேதி வாரியாக தெருக்களை பிரித்து வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்றும், அதோடு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின்படி, விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்