தமிழகத்தில் சட்டப்பேரவை அண்மையில் நடைபெற்றது. இதில் பல சிறப்பம்சங்களுக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் ரூ.600 கோடி மதிப்பீட்டில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ரூ.84 கோடி செலவில் வாங்கப்பட்ட புதிய 240 பேருந்துகளை, சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். இந்த புதிய பேருந்துகளில் 37 பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டவை என தெரிவித்தனர். இவை சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 103 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் இதையடுத்து திருச்சி மற்றும் தஞ்சை ஊரை மையமாக கொண்டு இயங்கக்கூடிய வகையில் ரூ.10 லட்சம் செலவில் வாங்கப்பட்ட இரண்டு அம்மா அரசு நடமாடும் பணிமுனை சேவையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…