தமிழகத்தில் இன்று 24 வயது ஆண், 28 வயது பெண் கொரோனாவால் உயிரிழப்பு.!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 18 பேரும், அரசு மருத்துவமனையில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த 24 வயது ஆண் ஒருவர் 09.07.2020 அன்று ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை கொரோனா சோதனை மாதிரி 09.07.2020 அன்று எடுக்கப்பட்டது. இந்நிலையில் 10.07.2020 அன்று முடிவின் விளைவு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் சிகிச்சை பெற்று வந்த நோயாளி கார்டியோஜெனிக் அதிர்ச்சி,மூச்சுக்குழாய் நிமோனியா காரணமாக 09.07.2020 காலை 11.00 மணிக்கு உயிரிழந்தார் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண்
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 20.06.2020 அன்று ஸ்கிசோஃப்ரினியாவுடன் அனுமதிக்கப்பட்டார். மேலும் கொரோனா சோதனை மாதிரி 02.07.2020 அன்று எடுக்கப்பட்டது. 03.07.2020. முடிவுவின் விளைவு
கொரோனா இருப்பது உறுதியானது. அதன் பின் செப்டிக் காரணமாக நோயாளி 08.07.2020 அன்று மாலை 01.30 மணிக்கு இறந்தார் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.