தமிழக மீனவர்கள் 24 பேரை விடுதலை!

tn fisherman

Fisherman : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 24 பேர் விடுதலை.

கடந்த மார்ச் மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதன்பின், 19 மீனவர்களையும் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று கொழும்புவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் திரும்பினர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தமிழ்நாடு மீனவர்கள் கைது தொடர்பான வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. கடந்த 21ம் தேதி கைதான தமிழ்நாடு மீனவர்கள் 25 பேரில் ஒருவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது இலங்கை நீதிமன்றம்.

எனவே, விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 24 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனால், இவர்களும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இன்று 19 பேர் நாடு திரும்பிய நிலையில், மேலும் 24 பேர் திரும்ப உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்