பல் பிடுங்கிய விவகாரம்.! 24 காவலர்கள் பணியிடமாற்றம்.! எஸ்பி சிலம்பரசன் அதிரடி உத்தரவு.!
அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து வந்து பலரது பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக 24 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதியில் விசாரணைக்காக அழைத்து வந்த பலரது பற்களை பிடுங்கி சித்தரவதை செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் பெயரில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது 4 வழக்குகள் பதியப்பட்டு துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உட்பட்டு உள்ளார்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பல்பிடுங்கிய விவகாரம் தொடர்பாக 24 காவலர்களை பணியிட மாற்றம் செய்து நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.