விவசாயிகளுக்கு விரைவில் 24 மணி நேரமும் மின்சாரம் – அமைச்சர் செந்தில் பாலாஜி
விரைவில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.
விவசாயிகளுக்கு விரைவில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மின் பகிர்மானத்துக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் முடிந்தவுடன் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனவும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செளந்தில்நாதன் எழுப்பிய கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார்.