அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதலமைச்சரை கடவுள் என்று கூறி 24 அரியர் வைத்திருந்த மாணவன் ஒருவன் நன்றியை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் கூறியதை அடுத்து மாணவ, மாணவர்கள் முதல்வருக்கு பாராட்டு மழைகளை பொழிந்தும், நன்றியையும் தெரிவித்தும் வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சியில் எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள கிரராப்பட்டியை சேர்ந்தவர் சஞ்சய் நேரு. பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவர் மொத்த 24அரியர்கள் வைத்துள்ளார். இந்த நிலையில் முதல்வர் ஆல் பாஸ் என்று அறிவித்ததை தொடர்ந்து சஞ்சய் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார். இந்த நிலையில் முதலமைச்சரை சஞ்சய் கடவுள் என்று புகழ்ந்து கூறியதோடு, எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆல் பாஸ் என்று அறிவித்த முதல்வருக்கு அனைத்து மாணவர்களின் சார்பில் நன்றி என்றும், அரியர் என்ற சுமையை நீக்கிய முதலமைச்சருக்கு நன்றி கூறும் வகையில் இனி வரும் தேர்வுகளில் அரியர் இல்லாமல் தேர்ச்சி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…