2,395 நியாய விலைக்கடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது – அமைச்சர் செல்லூர் ராஜு
இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.அப்போது அவர் பேசுகையில், திருத்தணி அருகே கரிம்பேடு ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பகுதிநேர நியாய விலைக்கடை அமைப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்கும்,
2011 முதல் 2019 மே மாதம் வரை, தமிழகம் முழுவதும் 673 முழுநேர நியாய விலைக்கடைகளும், 1722 பகுதிநேர நியாய விலைக்கடைகள் என மொத்தமாக 2,395 கடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளன என்று பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.