238 அரசு பள்ளிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது பள்ளி கல்வித்துறை வெட்கப்பட வேண்டும்-அன்புமணி..!

Published by
Dinasuvadu desk

 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 2,574 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 238 பள்ளிகள் மட்டும் 100% தேர்ச்சி பெற்றிருப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெட்கப்பட வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது பெரும் கவலையும், வருத்தமும் அளிக்கிறது.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்து பார்த்தால் மகிழ்ச்சியடைவதற்கு எதுவுமில்லை. உதாரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 6,754 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,907 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இது 28.23 விழுக்காடு ஆகும். இது மிகவும் கவுரவமான ஒன்றாகும். ஆனால், தமிழகத்திலுள்ள 2,574 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 238 பள்ளிகள் மட்டும் தான் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இது வெறும் 9.24% மட்டுமே. 25% அரசுப் பள்ளிகளால் கூட முழுத் தேர்ச்சி பெற முடியவில்லை என்பது பள்ளிக்கல்வித் துறை வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதேபோல், தேர்ச்சி விகிதங்களைப் பொறுத்தவரை விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், கடைசி இடம் வழக்கம் போல வட மாவட்டங்களுக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் 83.35% தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் அளவைவிட 03.01% குறைந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி மாநில அளவில் கடைசி 10 இடங்களை, அதாவது முறையே 23 முதல் 32 ஆவது இடம் வரை பிடித்துள்ள திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர், கடலூர், நாகை, திருவாரூர், அரியலூர், விழுப்புரம் ஆகியவை வட தமிழகத்தையும், காவிரி பாசனப் பகுதியையும் சேர்ந்தவை ஆகும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதேநிலை தான் நீடிக்கிறது. வட தமிழக மாவட்டங்களிலும், காவிரி பாசன மாவட்டங்களிலும் கல்வித் தரத்தை உயர்த்த சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதில்லை.

இதேநிலை நீடித்தால் வடமாவட்டங்கள் கல்வியில் மேலும் பின்தங்கிவிடும் ஆபத்து உள்ளது. எனவே, அரசுப் பள்ளிகள் மற்றும் வடமாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றை சரி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக தமிழகத்தின் முன்னணி கல்வியாளர்களைக் கொண்டு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்” என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Recent Posts

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

3 hours ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

3 hours ago

மகள் – மனைவியுடன் கியூட் உரையாடல்… மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!

துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…

3 hours ago

அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…

4 hours ago

கார் ரேஸில் வாகை சூடிய அஜித்… தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! – வைரல் வீடியோ..

துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…

4 hours ago

“முதல்வரின் ஆணவம் நல்லதல்ல” முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!

சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…

5 hours ago