234 தொகுதி வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம்.. சீமான்.!
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வதாக சீமான் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே தனது பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும். அரசியல் கட்சியினர் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழத்தின் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க முடிவு செய்துள்ளது. இதனால், வருகிற மார்ச் 07-ஆம் ஞாயிற்றுக்கிழமை மாலை 03 மணியளவில் சென்னை, இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடலில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.