234 சட்டமன்ற தொகுதிகள் ! பொறுப்பாளர்களை நியமித்த விஜயகாந்த்

Default Image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ,234 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேமுதிக.

இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அண்மையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.அந்த அறிக்கையில் 234 சட்டமன்ற தொகுதிகளின், தேமுதிக பொறுப்பாளர்கள், முதல் கட்டமாக, இன்று நியமனம் செய்யப்படுகிறார்கள்.இவர்களுக்கு மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, வட்ட, ஊராட்சி,கிளைக் கழக,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk
anbumani sekar babu
IND vs PAK
dragon movie box office