தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 232 பேர் காவலில் உயிரிழப்பு – மத்திய அரசு ..!

Default Image

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் காவல் மற்றும் நீதிமற்ற காவலில் இருந்த 232 பேர் உயிழந்துள்ளனர்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அரசு அளித்த பதிலில் காவலில் உயிரிழந்தவர்களின் விவரங்களை தெரிவித்துள்ளது. அதில், இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் காவலில் 348 பேரும், நீதிமன்ற காவலில் 5,221 பேரும் உயிரிழந்தனர். இந்தியா முழுவதும் 2018-19-ல்  போலீஸ் காவலில் 136 பேரும், நீதிமன்ற காவலில் 1,797 பேரும், 2019-20-ல் போலீஸ் காவலில் 112 பேரும், நீதிமன்ற காவலில் 1,584 பேரும், 2020-21-ல் போலீஸ் காவலில் 100 பேரும், நீதிமன்ற காவலில் 1,840 பேரும் உயிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் காவல் மற்றும் நீதிமற்ற காவலில் இருந்த 232 பேர் உயிழந்துள்ளனர். 2018-19-ல் தமிழகத்தில் போலீஸ் காவலில் 11 பேரும், நீதிமன்ற காவலில் 89 பேரும், 2019-20-ல் போலீஸ் காவலில் 12 பேரும், நீதிமன்ற காவலில் 57 பேரும், 2020-21-ல் போலீஸ் காவலில் 2 பேரும், நீதிமன்ற காவலில் 61 பேரும் உயிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்