ரயில்வே பாதுகாப்பு படை மூலம் 231 குழந்தைகள் மீட்பு!
தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் 231 குழந்தைகள் மீட்பு என தகவல்.
நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான சிறுவர்கள், சிறுமியர்கள் வீட்டில் கோபித்துக்கொண்டும், கவனிக்க ஆள் இல்லாமலும் அல்லது வேறொரு காரணங்களுக்காக வருகின்றனர். எங்கு செல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் ரயில் நிலையங்களில் சுற்றித்திரிவதோடு, அங்கவே தஞ்சமடைகின்றனர். அப்படிப்பட்டவர்களை மீட்டு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் காப்பகங்களில் சேர்க்கும் பணியில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குழந்தைகளை மீட்டு காப்பகங்களில் தங்க வைக்கின்றனர்.
இந்த நிலையில், தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 231 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 231 குழந்தைகள் ரயில்வே பாதுகாப்பு படை மூலம் மீட்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் குழந்தைகளுக்கான உதவி மையங்கள் செயல்படுகின்றன என்றும் மீட்கப்பட்ட 231 குழந்தைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெற்கு ரயில்வே தகவல் கூறியுள்ளது.