231 மாணவ, மாணவிகள் பிளஸ் டூ பொதுத்தேர்வில் ஆயிரத்து 180 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்துள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 50 மாணவர்களும், 181 மாணவிகளும் ஆயிரத்து 180க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். ஆயிரத்து 151 முதல் ஆயிரத்து 180 மதிப்பெண்கள் வரை 4 ஆயிரத்து 847 மாணவ, மாணவிகள் எடுத்துள்ளனர்.
ஆயிரத்து 126 முதல் ஆயிரத்து 150 மதிப்பெண்கள் வரை 8 ஆயிரத்து 510 மாணவ, மாணவிகள் எடுத்துள்ளனர். 700க்கும் குறைவான மதிப்பெண்களை 3 லட்சத்து 47 ஆயிரத்து 938 மாணவ, மாணவிகள் எடுத்துள்ளனர்.
மாணவ மாணவிகள்
1,180க்கும் 231
1,151 – 1,180 4,847
1,126 – 1,150 8,510
1,101-1,125 11,739
1,001-1,100 71,368
901-1,000 1,07,266
801-900 1,43,110
701-800 1,65,425
700, அதற்கும் கீழ் 3,47,938