கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

நிவர் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது கரையை கடந்துள்ளது. இதனால், சென்னை, கடலூர், செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
சென்னை நிவர் புயல் மற்றும் அதன் நிலமை குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை மாநகரில் 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார், நிவர் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
நிவர் புயலால் சென்னையில் எந்தவித பெரிய சேதமும் ஏற்படவில்லை, பொதுமக்கள் தனி மனித இடைவெளியை முறையாக பின்பற்றினால் கொரோனவை வெல்ல முடியும். தற்போது, சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025