மீண்டும் மணலியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 229 டன் அம்மோனியம் நைட்ரேட்.!

Default Image

சென்னை மணலி துறைமுகத்தில் இருந்து 229டன் அம்மோனியம் நைட்ரேட்டுடன் 12 கன்டெய்னர் லாரி வாயிலாக ஐதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

கடந்த சில தினங்களுக்கு முன்பு லெபனான் நாட்டில் பெய்ரூட் துறைமுகத்தில் அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்திற்கு கடந்த 6 ஆண்டுகளாக அம்மோனியம் நைட்ரேட்டை ஒரே இடத்தில் இருப்பு வைத்தது தான் காரணம் என்று கூறப்பட்டதை அடுத்து சென்னை மணலி துறைமுகத்தில் 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்ட 740 டன் எடையுள்ள அம்மோனியம் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு மணலியில் உள்ள சரக்குப்பெட்டகத்தில் 37 கன்டெய்னர்களிலாக வைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் 12 ஆயிரம் பேர் வசிப்பதால், அம்மோனியம் நைட்ரேட் கன்டெய்னர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து, நேற்றைய முன்தினம் சுங்கத்துறை அதிகாரிகள் தலைமையில் ஹைதராபாத் நிறுவனத்திற்கு அம்மோனியம் நைட்ரேட் நிறைந்த 37 கன்டெய்னர்களில் 10 கன்டெய்னர்களை லாரி மூலம் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் தற்போது மேலும் 229 டன் அம்மோனியம் நைட்ரேட் நிறைந்த 12 கன்டெய்னர் லாரிகள் சாலை வழியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்