கஞ்சா போதையில் தெருவில் சென்றவர்களை கடித்து குதறிய 22 வயது இளைஞன்!
கஞ்சா போதை தலைக்கேறியதும் தெருவில் செல்லக்கூடிய மக்களையெல்லாம் விரட்டி விரட்டி கடித்து குதறிய 22 வயது இளைஞன் கட்டிப் போடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 22 வயதுடைய கண்ணன் எனும் இளைஞன் கடந்த பல வருடங்களாகவே கஞ்சா அடிக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது இவருக்கு கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் போதையில் என்ன செய்வதென்று அறியாமல் தெருவில் செல்லக்கூடிய மக்களை எலலாம் விரட்டி விரட்டி ரத்தம் குடித்து ரத்தக் காயங்களை கொடுத்துள்ளார். உடல் முழுவதும் ரத்தத்துடன் காணப்படக்கூடிய இந்த 22 வயது இளைஞனை அங்குள்ள சில இளைஞர்கள் மிகவும் மல்லுக்கட்டி அச்சத்துடன் கைகளையும் கால்களையும் கட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தன்னை அவிழ்த்து விடவேண்டும் எனவும் தான் சுதந்திரமாக திரிய வேண்டும் எனவும், தான் ஏற்கனவே வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் காணாமல் போன விரக்தியில் தான் இவ்வாறு கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளதாகவும் உளறிக்கொண்டே சென்றுள்ளான்.
ஒரு கட்டத்தில் என் கட்ஸை பாருங்கள், ஒரே அடியில ஒருத்தனை தூக்கி வீசிறுவேன் என கூறி தன்னை அவிழ்த்துவிடுமாறு கூறியுள்ளார். இளைஞன் எவ்வளவு கூறியும் யாரும் கயிற்றை அவிழ்த்து விடாததால் அருகில் இருந்தவர்கள் எல்லாம் மிரட்ட ஆரம்பித்துள்ளார். அதன்பின் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றவர்களே அச்சத்துடன் மருத்துவமனையில் உள்ள கட்டிலில் கட்டிப் போட்டு மருத்துவர்களை அழைத்துள்ளனர். மருத்துவர்கள் அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து தற்போது சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. கஞ்சா போதையில் 22வயது இளைஞன் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டு திரைப்பட வசனம் பேசிக் கொண்டிருக்கக் கூடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.