ஊராட்சி மன்ற தலைவராக 22 வயது பிபிஏ பட்டதாரி பெண்.!
- தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- பூசலாங்குடி ஊராட்சி தலைவராக திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 22 வயதான பிபிஏ பட்டதாரி ஆர்.சுபிதா வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை இன்று 315 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி ,தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
21 வயதில் பஞ்சாயத்து தலைவரான கல்லூரி மாணவி ஜெய் சந்தியா ராணி!
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் பூசலாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 22 வயதான பிபிஏ பட்டதாரி ஆர்.சுபிதா போட்டியிட்டு இருந்தார். இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆர்.சுபிதா வெற்றி பெற்று உள்ளார்.