கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 14 மாவட்டங்களுக்கு 22 அமைச்சர்களை முதல்வர் நியமித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக வருகின்ற நாளை முதல் மே 24 வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை 11.30 மணி அளவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், முதலமைச்சரால் அமைச்சர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 மாவட்டங்களுக்கு 22 அமைச்சர்களை முதல்வர் நியமித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று புதிதாக 28,897 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 13,80,259 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 7,130 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,90,589 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இன்று 236 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,648 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…