புழல் சிறையில் இருந்து 22 ஆயுள் கைதிகள் விடுதலை!
புழல் சிறையில் இருந்து மேலும் 22 ஆயுள் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் நேற்று விடுதலை.
அண்ணா பிறந்தலையொட்டி, புழல் சிறையில் இருந்து மேலும் 22 ஆயுள் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 24ம் தேதி புழல் சிறையில் இருந்து முதற்கட்டமாக 15 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நேற்று 21 ஆன் கைதிகள், ஒரு பெண் கைதி உள்பட 22 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக்கத்தில் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்து வருகின்றன.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் சுமார் 700 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில், 10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகள், அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தகுதியானவர்கள் என்றும் குற்றச்செயல்களில் தண்டனை பெற்று வருபவர்கள் விடுதலை செய்ய தகுதியற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 10 சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இதுவரை 96 ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புழல் சிறையில் இருந்து மேலும், 22 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.