மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 22 ‘ஐம்பொன் சிலைகள்’ கண்டெடுப்பு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த சட்டநாதர் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த கோவிலில் இன்று 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம், 100-க்கும் மேற்பட்ட செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது அனைத்துமே கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனவும், கருதப்படுகிறது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடத்துவதற்காக, யாகசாலை அமைக்க பள்ளம் 2 அடியில் தோண்டப்பட்டுள்ளது.
அப்படி தோண்டும் போது தன இந்த 22 ஐம்பொன் சிலைகள் கண்டுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் சிலைகளை ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.