தமிழகம் முழுதும் சென்னை உட்பட 22 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.
- பெண்களுக்கான குற்றத்தடுப்பு மதுரை டிஎஸ்பி மகேந்திரன் மதுராந்தகம் சப் டிவிசன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- தர்மபுரி குற்ற ஆவணகாப்பக டிஎஸ்பி சுப்பையா சத்தியமங்கலம் சப் டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி கங்காதரன் திருவள்ளூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி விஸ்வநாத் ஜெயின் தரமணி உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
- தரமணி உதவி ஆணையர் சுப்பராயன் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக சென்னையில் மாற்றப்பட்டுள்ளார்.
- பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக சென்னை பன்னீர்செல்வம் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
- ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு குழு உதவி கமிஷனர் கோவிந்தராஜு பரங்கிமலை உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
- பரங்கிமலை உதவி ஆணையர் மோஹன்தாஸ் மதுரை நகர குற்றப்பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
- திருவள்ளூர் குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி கண்ணன் ராயபுரம் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
- ராயபுரம் உதவி ஆணையர் தனவேல் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சச்சிதானந்தம் ஆம்பூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- மேற்கண்ட 10 பேர் உட்பட மாவட்டம் முழுதும் 22 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU