ஒரே நாளில் அரசுப் பேருந்துகளில் 2,17,030 பேர் பயணம் ..!

பொங்கல் பண்டிகை வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதன்படி பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, தமிழ்நாடு முழுவதும் 19, 484 சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 2,17,030 பேர் பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துக்கழகம் தகவல் வழங்கியுள்ளது.

Holiday: வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை.!

வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் பொங்கல் சிறப்பு பேருந்துகள் 1,260  மூலம் 2,17,030 பேர் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.96 லட்சம் பயணிகள் பேருந்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து அதிக அளவில் பேருந்து புறப்பட்டுச் சென்றதால் சென்னை- திருச்சி ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றும் அதிக அளவில்  பொதுமக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்