தமிழகத்தில் 21,228 கொரோனா பாதிப்பு…! 144 பேர் உயிரிழப்பு…!
கடந்த 24 மணி நேரத்தில் 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 144 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு, 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினசரி உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் தொற்று பாதிப்பு சமீப நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 144 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 19,512 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,25,230 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.