21 வயது கல்லூரி மாணவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி.!
- தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
- கோவையைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவர் ஒருவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் இந்த தேர்தலில் கோவையைச் சேர்ந்த நாகர்ஜூனா என்ற 21 வயதான கல்லூரி மாணவர் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் கிராம ஊராட்சி மன்ற மூன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதுவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இளம் வயது வேட்பாளர் என்ற பெருமையோடு நாகர்ஜூனா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அந்த மாணவரின் தேர்தல் வாக்குறுதிகள், அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், குப்பை மறுசுழற்சி, உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் திட்டங்களை செய்துத் தரப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். மேலும், மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் தான் இளம் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் நாகர்ஜூனா தெரிவித்துள்ளார்.