21 வயதில் பஞ்சாயத்து தலைவரான கல்லூரி மாணவி ஜெய் சந்தியா ராணி!
- தமிழக்தில் 27 மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்து வாக்கு எண்ணிக்கை வேகமாக நடைபெற்று வருகிறது.
- இதில் 21 வயது கல்லூரி மாணவி ஜெய் சந்தியா ராணி கிருஷ்ணகிரி மாவட்டமத்தில் கே.என். தொட்டி பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 97 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்று முடிந்தநிலையில் இன்று 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட சூளகிரி ஒன்றியத்தில் கே.என் தொட்டி பஞ்சாயத்து தேர்தலில் 21 வயது கல்லூரி மாணவி ஜெய் சந்தியா ராணி போட்டியிட்டார். அவர் தற்போது 210 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றிபெற்றுள்ளார். இவர் கர்நாடகவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தந்தை ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.