ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் தீராத பிரச்சனை என்றால் மீனவர்கள் பிரச்சனை என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். ஏனென்றால், தமிழக மீனவர்களை கைது செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாக வைத்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், மீனவர்களின் படகுகள், வலைகளையும் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசு, மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும், நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இதில், இலங்கை கடற்கொள்ளையர்கள் சம்பவமும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் இதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருந்தாலும், தமிழக மீனவர்கள் கைது தொடர்ந்து நடந்து வருகிறது. அந்தவகையில், கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
தனி நீதிபதி உத்தரவு: ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணை!
அதாவது, கடந்த மாதம் 16 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மீன் பிடித்தபோது 22 மீனவர்களை கைது செய்திருந்தது இலங்கை கடற்படை. கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதால் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்களில் 21 பேரை விடுதலை செய்து இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர் முருகனுக்கு மட்டும் 24 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என கூறப்படுகிறது.
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…
வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன, இந்த ஆண்டில் வரும் தேதி ,நேரம் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை: சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை இன்று…