இன்று காலை 9 மணி முதல் தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வை கண்டித்து திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. நிறைவுரையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ” நீட் தேர்வினால் நாம் 21 உயிர்களை பறிகொடுத்து இருக்கிறோம். 21 உயிர்கள் போனது நாம் தற்கொலை என பேசிக்கொண்டு இருக்கிறோம்.
நான் சொல்கிறேன் இந்த 21 தற்கொலையும் தற்கொலை இல்லை கொலை இந்த கொலையை செய்தது ஒன்றிய பாஜக அரசு. அந்த கொலைக்கு துணை நின்றது அடிமை அதிமுக இதனை நான் திரும்ப திரும்ப சொல்வேன். நான் இந்த நீட் தேர்வை பற்றி கடந்த 5 வருடங்களாகவே பேசிவிட்டேன். இனிமேல் நான் பேசுவதற்கும் தயாராக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் நான் அமைச்சராக பங்கேற்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் நான் சட்டமன்ற உறுப்பினராக பங்கேற்கவில்லை, ஒரு சாதாரணமான மனிதராக தான் பங்கேற்றுள்ளேன்.
இறந்து போன அந்த 20 குழந்தைகளுடைய அண்ணனாக பேச வந்திருக்கின்றேன் இங்கு உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவரும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் இப்போது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இங்கு மட்டுமில்லை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மருத்துவர்கள், மக்கள் என பலரும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறீர்கள் அவர்கள் அனைவர்க்கும் நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஆளுநர் ரவி அவர்களுக்கு எவ்வளவு திமிரு ஒரு கூட்டம் அவர் நடித்துகிறார் அது என்ன கூட்டம் என்றால் நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களை அழைத்து பாராட்டுவதற்கு ஒரு கூட்டம். கிட்டத்தட்ட ஒரு பயிற்சி வகுப்பு மாதிரி நீட் தேர்வுக்கு ஆளுநர் பயிற்சி வகுப்பு நடத்துகிறார். அதில் வெற்றிபெற்ற ஒரு மாணவருடைய தந்தை ஆளுநரிடம் என்னுடைய பயனை நான் எப்படியோ நீட் தேர்வில் வெற்றிபெற வைத்துவிட்டேன்.
நான் வசதியாக இருந்த காரணத்தால் வெற்றிபெற வைத்துவிட்டேன் என்னைப்போல எவ்வளவு பேர் இப்படி செய்யமுடியும்? நீங்கள் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என கூறினார். அதற்கு ஆளுநர் i will naver ever என திமிராக பேசினார். நான் ஆளுநரை பார்த்து கேட்கிறேன் who are u? உங்களுக்கு எங்களுடைய முதலமைச்சர் சொல்வதை ஒன்றிய அரசிடம் சொல்வது மட்டும் தான் உங்களுடைய வேலை. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வேறு என்ன அதிகாரம் உள்ளது? ஆளுநர் ரவி என்ன மக்கள் பிரதிநிதியா? தயவுசெஞ்சி நீங்கள் ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுங்கள் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டத்துடன் கேள்வி எழுப்பினார்.
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…