2024 மக்களவை தேர்தல்… திமுக நேரடியாக களமிறங்கும் 21 தொகுதிகள்!

dmk

DMK : நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது.

Read More – இதுதான் நாங்க போட்டியிடும் ‘சாதகமான’ தொகுதி.! காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு.!

கடந்த சில வாரங்களாக பரபரப்பாக திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டது. இதன்பின் எந்தெந்த தொகுதிகள் என ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், அதுவும் இன்று நிறைவு பெற்றது.

Read More – ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!

அதன்படி, இன்று கடைசியாக காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. அதேசமயம், மதிமுகவுக்கும் திருச்சி தொகுதியை ஒதுக்கி, கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்தது திமுக. கடந்த முறை ஈரோட்டில் போட்டியிட்ட மதிமுக இந்த முறை திருச்சியில் போட்டியிடுகிறது.

எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 மக்களவை தொகுதிகளில், காங்கிரஸ் 10, சிபிஎம், சிபிஐ, விசிக தலா 2, முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 என கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்கவுள்ளது.

Read More – SBI-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை… மீண்டும் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

அதன்படி, சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பொள்ளாச்சி, கோவை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, ஸ்ரீபெரம்புதூர், பெரம்பலூர், தேனி, ஈரோடு, ஆரணி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்