நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ₹.81 கோடியே 24 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 21 புதிய பாலங்களை தமிழக முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கிராசிங்க்கு மாற்றாக, ₹.21 கோடியே 96 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையை வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.
மேலும் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், ராமநாதபுரம், தர்மபுரி, திருச்சி, அரியலூர், தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ₹.59 கோடியே 28 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் ₹.81 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 21 பாலங்கள் மற்றும் ஒரு வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்களான ஜெயக்குமார், பாண்டியராஜன், தலைமை செயலாளர் சண்முகம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் கார்த்திக், நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் தலைமை பொறியாளர் செல்வன், பெருநகர தலைமை பொறியாளர் சுமதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…