சி.ஆர்.பி.எஃப் வீரர் சுப்பிரமணியன் உடல் 21 குண்டுகள் முழங்க விரும்பி விவசாயம் செய்த சொந்த வயலிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
தீவிரவாத தாக்குதலில் கயத்தாறு அருகே சவலாபேரி கிராமத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்ரமணியன் (27) உயிரிழந்துள்ளார்.அதேபோல் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் உயிரிழந்துள்ளார்.தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
தாக்குதலில் இறந்த தூத்துக்குடி சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ,மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், காவல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். அஞ்சலிக்கு பிறகு சுப்பிரமணியன் உடல் தூத்துக்குடி சவலாப்பேரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
சுப்பிரமணியன் உடல் சொந்த ஊரான சவலப்பேரிக்கு கொண்டுவரப்பட்டது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் , காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
சுப்பிரமணியன் குடும்பத்தினரிடம் வழங்கினார் துணை முதல்வர் சுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை துணை முதல்வர் பன்னீர் செல்வம் வழங்கினார்.
இறுதியாக சுப்பிரமணியன் உடல் 21 குண்டுகள் முழங்க விரும்பி விவசாயம் செய்த சொந்த வயலிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…