21 ஆயிரம் மின் கம்பங்களை சூறைக்காற்றால் தூக்கி எரிந்த கொடூரன் கஜா….!!இருளில் மூழ்கிய 3 மாவட்ட மக்கள்…!!!
21 ஆயிரம் மின் கம்பங்களை தனது சூறைக்காற்றால் தூக்கி எரிந்த கஜாவால் 3 மாவட்ட மக்கள் இருளில் முழ்கினர்
கொடூரன் கஜா தாண்டவ சூறைக்காற்றால் பிடிங்கி எரிந்த மின் கம்பங்கள் 21 ஆயிரம் மின் கம்பங்ககள் பலத்த சேதம் அடைந்துள்ளது.இந்த மின் கம்பங்கள் அனைத்தும் திரூவாரூர் மாவட்டத்தில் 3000 மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தது இந்தா ஆண்டு கடலூரை போல் நாகப்பட்டிணத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது கஜா மேலும் 4000 மின் கம்பங்கள் சாய்ந்தது இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 9000 மின் கம்பங்கள் சாய்ந்தது.இதனால் சாய்ந்த மொத்த மின் கம்பங்கள் 21 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
3 மாவட்டத்தில் 2 மின்னழுத்த கோபுரங்கள்,50 துணை மின் நிலையங்கள் ,50 டிரான்ஸ் பார்மர்கள், உள்ளிட்டவையும் சேதமடைந்துள்ளது.மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த அவர் உயர் அழுத்த மின்பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் தான் மின் இணைப்புகள் வழங்க முடியும் எனவே 2 அல்லது 3 நாட்களில் மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு விடும் விரைவில் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.மேலும் முதற்கட்டமாக நடவடிக்கையாக மருத்துவமனைகள மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு அலுவலகங்கள் இருக்கும் இடங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
DINASUVADU