20,567 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கம் …!நவம்பர் 1ஆம் தேதி முன்பதிவு தொடக்கம் …!அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Default Image

தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Image result for . Minister MR Vijayabaskar
இது தொடர்பாக  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில்,சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும்.மொத்தம்  20567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.சென்னையில் இருந்து மட்டும் பேரூந்துகளுக்கும் மற்ற மாவட்ட 9200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. நவம்பர் 1-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெறும்.சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில்  அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆனால் ஆம்னி பேருந்துகளுக்கு இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
அதேபோல் விரைவில் 100 மின்சார பேருந்துகள் வாங்கப்படும், இவற்றில் சென்னையில் 80-ம், கோவையில் 20-ம் இயக்கப்படும்.மாணவர்களுக்கு பஸ் பாஸ் உடனடியாக வழங்க நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்