தமிழகத்தில் 20,453 குடியிருப்புகள் தரமற்றவை – உடனே இடிக்க அரசின் குழு பரிந்துரை
தமிழகத்தில் உள்ள 22,271 குடியிருப்புகளில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால்,அவற்றை உடனடியாக இடிக்க அரசின் குழு பரிந்துரைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததையடுத்து,தமிழகத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசால் தொழில்நுட்ப வல்லுநர் குழு நியமிக்கப்பட்டு,கட்டடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள 22,271 குடியிருப்புகளில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால்,அவற்றை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள அரசின் தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது..
மேலும்,இது தொடர்பாக,நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் தொழில்நுட்ப வல்லுநர் குழு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.