2024 தேர்தல் திமுக vs பாஜக தான்.! அண்ணாமலை திட்டவட்டம்.!

Published by
மணிகண்டன்

இன்று சென்னை தி- நகரில் பாஜக கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வகைகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில், நம்மிடம் இருந்து பிரிந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமையிடம் விளக்கம் அளித்துள்ளேன். இனி தேசிய தலைமை முடிவு செய்யும் என அண்ணாமலை பேசியதாக தகவல்கள் முன்னதாக வெளியாகி இருந்தன.

இந்த ஆலோசனை கூட்டத்தொடர் முடிந்து பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், 1998ஆம் ஆண்டு முதலே தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) இந்தியாவில் இருக்கிறது. 25 ஆண்டுகளாக NDA கூட்டணி இருக்கிறது. அதில் நிறைய கட்சிகள் வரும், போகும்.

வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் NDA கூட்டணி சார்பாக தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். அதற்கு தற்போது அறிகுறிகள் தெரிகின்றன. ஒவ்வொரு கட்சியிலும் அந்தந்த கட்சி முன்னேற தான் பார்க்கும். பாஜகவும் அப்படி தான். 2024 தேர்தல் மிக முக்கிய தேர்தல். தமிழகத்தில் 39க்கு 39 பாஜக கூட்டணி வெற்றி பெரும்.

என்மீது அதிமுக மட்டுமல்ல பல கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதற்கெல்லாம் நான் பதில் கூற முடியாது. நான் எனது பாதையில் தெளிவாக இருக்கிறேன். பாஜக எப்படி செல்ல வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். தமிழகத்தில் ஆளும் கட்சியாக திமுக உள்ளது . மத்தியில் நாங்கள் (பாஜக) இருக்கிறோம். 2024 தேர்தல் இதற்கெல்லாம் பதில் சொல்லும் .

3வது முறையாக பிரதமர் மோடி வரவேண்டும்.  2024 தேர்தல் திமுக vs பாஜக தான்.  பாஜக சார்பாக நாங்கள் செய்ததை சொல்கிறோம். திமுக சார்பாக அவர்கள் செய்ததை சொல்லட்டும். மக்கள் முடிவு எடுப்பார்கள். திமுக தான் ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் தான் Powerஇல் இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

4 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

4 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

6 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

6 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

6 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

7 hours ago