2019 மக்களவை தேர்தல்: இன்று தமிழகம் வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (ஏப்ரல் 2-ஆம் தேதி) தமிழகம் வருகிறார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.மேலும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்ரல் 2-ஆம் தேதி அதாவது இன்று தமிழகம் வருகிறார்.சென்னையில் இன்று (ஏப்ரல் 2-ஆம் தேதி )அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்.அனைத்து கட்சி கூட்டத்தில் சுனில் அரோரா பங்கேற்கிறார்.தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடனும் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் உள்பட காலியாக இருக்கும் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தமிழக அரசியல் கட்சியினர் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.