2018 தமிழக பட்ஜெட்:பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை!
பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். ஏற்கெனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு அவ்வளவாகச் செய்யப்படாதது மட்டுமின்றி பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடன் சுமார் மூன்றரை லட்சம் கோடி இருப்பதாகவும் இந்த ஆண்டு மேலும் ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாகப் புதிய கடன் வாங்கப்போவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழக அரசின் 2018-19-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சரமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.