தமிழக பட்ஜெட் 2018:சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்…
3 நாட்கள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவை , பட்ஜெட் மீதான விவாதத்திற்காக இன்று மீண்டும் கூடுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 15ம் தேதி, நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அன்று மாலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் காவிரிப் பிரச்சனை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின், பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும். கூட்டத் தொடரின் இறுதிநாளான 22ம் தேதி முன்பண மானிய கோரிக்கைகள் பேரவையில் வைக்கப்படும்.
எதிர்க்கட்சியினரின் உரைகளுக்கு பதில் அளித்து துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதிலுரை நிகழ்த்துவார். காவிரிப் பிரச்சினை, குரங்கணி தீ விபத்து போன்ற பிரச்சினைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.