2010 சென்னை மெட்ரோ ஒப்பந்தம்; புகாருக்கு மெட்ரோ நிறுவனம் மறுப்பு.!

Default Image

2010 ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ பணிகளில் எந்த தவறும் நடைபெறவில்லை என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்:

2009 ஆம் ஆண்டு சென்னையில் மெட்ரோ அமைக்கும் பணிகளில், ஆல்ஸ்டன் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக கூறப்பட்ட புகாருக்கு, மெட்ரோ நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2009 ஆம் ஆண்டு, திமுக ஆட்சியின் கீழ் தொடங்கப்பட்டது.

புகார்:

அப்போதைய மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ஒப்பந்தம் வழங்கும் விவகாரத்தில் ஆல்ஸ்டன் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதால், 200 கோடி ரூபாய் பெறப்பட்டதாகக் கூறப்படும் புகாருக்கு மெட்ரோ நிர்வாகம், மறுத்து தவறு நடக்கவில்லை என கூறியிருக்கிறது.

விளக்கம்:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த புகார் குறித்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசு இதற்கு விளக்கம் அளித்திருக்கிறது. சென்னை மெட்ரோ நிறுவனம், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நிறுவனம் இணைந்து இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்திய நிலையில், ஆல்ஸ்டன் நிறுவனத்திற்கு எந்தவித சலுகையும் அளிக்கப்படவில்லை என செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறது.

இந்த டெண்டர் விவகாரத்தில் நியாமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, ஒப்பந்தம் நடந்துள்ளதாகவும், முறைகேடுகள் எதுவும் நடக்க வில்லை என கூறியிருக்கிறது. அனைத்து புகார்களும் தவறானவை, இந்த புகார்களை முற்றிலும் மறுப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்