திடீர் பரபரப்பு …!மளமளவென குவிக்கப்படும் 20,000 போலீசார் …!போலீசார் வளையத்துக்குள் சென்னை …!
நாளை விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி 20,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் விநாயகர் சதூர்த்திக்காக பொது இடங்களை ஆக்கிரமித்து சிலைகள் வைக்கவும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியை பெறாமலும் பல இடங்களில் சிலை வைக்கப்படுவதை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசு வகுத்த விதிகள் படி விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைப்பது சட்ட விரோதம் ஆகாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 2,500 விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளித்தது.அதேபோல் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் மாநகர காவல்துறை தெரிவித்தது.
தற்போது செங்கோட்டை ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து சென்னையில் நாளை விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி 20,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து கரைக்கும் இடங்கள் வரை பாதுகாப்பு வழங்க காவல்துறை முடிவு செய்துள்ளது.மேலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு விநாயகர் சிலை ஊர்வலம் கண்காணிக்கப்பட உள்ளது.விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சிசிடிவி கேமரா பொருத்துவது இதுவே முதல்முறை ஆகும்.