20,000 கோடி ரூபாய்! ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழக அரசு இன்று ஒப்பந்தம்!
ஹூண்டாய் நிறுவனத்துடன், 20,000 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவனத்துடன் ரூ.1,800 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், தமிழகத்தில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் ஹூண்டாய் தொழிற்சாலையை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. மேலும், மின்வாகன மின்னேற்று நிலையங்கள், நவீன வகை கார்கள் உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்படுகிறது.