ரூ.20,000 கோடி முதலீடு! ஹூண்டாய் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கையெழுத்து – முதலமைச்சர் உரை!

MK STALIN (6)

ரூ.20,000 கோடி முதலீடு செய்வதற்காக தமிழ்நாடு அரசுடன் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்து.

தமிழ்நாட்டில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.20,000 கோடி முதலீட்டிலான பணிகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரூ.20,000 கோடி முதலீட்டில் ஹூண்டாய் தொழிற்சாலையை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மின்வாகன மின்னேற்று நிலையங்கள், நவீன வகை கார்கள் உருவாக்குதல் ஆகிய பணிகள் இந்த ஒப்பந்தம் மூலம் மேற்கொள்ளப்படும். இந்த நிகழ்வில் பேசிய முதல்வர், தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனத்தின் மொத்த முதலீடு ரூ.23,900 கோடியாக உயர்ந்துள்ளது. வாகனங்கள் தயாரிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டுக்கான மின் வாகன கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. கார் ஏற்றுமதியில் ஹூண்டாய் நிறுவனம் 2வது இடத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் 15,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு, 2 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கி தர உள்ளது. தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஆதரவு என்று தொடரும் என்றார்.

மேலும், ரூ.20,000 கோடி முதலீடு 2023-க்குள் தமிழ்நாட்டை ரூ.1 லட்சம் கோடி பொருளாதாரமாக மாற்றும் அரசின் குறிக்கோளுக்கு உதவும். தொழில்துறை ஏற்கனவே முன்னேறியுள்ளது, இனிமேலும் போகிறது எனவும் தெரிவித்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர், நிர்வாக காரணங்களுக்காக இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிய தொழில்துறை அமைச்சர் TRB ராஜா தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்