ரூ.600 கோடி செலவில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் – முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பு
முதலமைச்சர் பழனிச்சாமி 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.120 கோடி செலவில் புற்றுநோய் சிறப்பு மையம் உருவாக்கப்படும். 296 சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். ஈரோடில் உயர் சிறப்பு மருத்துவமனையாக உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் மேம்படுத்தப்படும்.
சென்னை கே.கே.நகர் மருத்துவமனையில் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். 22 மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆலோசனை மையம் அமைக்கப்படும். 23 அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் 32 தானியியங்கி மையங்கள் அமைக்கப்படும். சேலத்தில் புதிய சுகாதார மையம் உருவாக்கப்படும்.
புதிதாக 2000 பேருந்துகள் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்படும் .திருச்சி மாவட்டத்தில் கரூரை தலைமையிடமாக கொண்டு பால் உற்பத்தியாளர் நிலையம் அமைக்கப்படும்.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு புதிய பால் உற்பத்தியாளர் நிலையம் அமைக்கப்படும். தேனியை தலைமையிடமாக கொண்டு புதிய பால் உற்பத்தியாளர் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.