#BREAKING: தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் மூடல்..!
மருத்துவர்கள் இடமாற்றம் காரணமாக 2000 மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த டிசம்பர் முதல் செயல்பட்டு வந்த நிலையில், அம்மா மினி கிளினிக்கிள் பணியாற்றிய மருத்துவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு சிகிச்சை பணிக்கு மாற்ற திட்டமிட்டு இருப்பதால் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் மூடப்படுவதாக கூறப்படுகிறது.
மினி கிளினிக்குகள் மூடல்.! pic.twitter.com/IzCf5YHDii
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) April 24, 2021
மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடப்பட்டாலும் துணை சுகாதார நிலையங்கள் வழக்கம்போல செயல்படும். கொரோனா தடுப்பு பணிகள் முடியும் வரை மினி கிளினிக்குகள் செயல்படாது என கூறப்படுகிறது.