மதுரையில் 200 டன் ரேஷன் அரிசி, 7 லாரிகள் பறிமுதல்!

Default Image

மதுரையில் குடோனியில் பதுக்கி வைத்து ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்ததது அம்பலம்.

மதுரை கல்மேடு பகுதியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டியிருந்த 200 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசிக்காக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து 20 ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, மதுரை கல்மேடு பகுதியில் உள்ள ஒரு நெல் அரவை ஆலைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், மதுரை கல்மேடு பகுதியில் உள்ள ஆலையில் ரேஷன் அரிசி டன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டியிருப்பதாக மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதன்பின் எஸ்பி பாஸ்கரன், போலீசுடன் குடோனுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டதில் மூட்டை மூட்டையாக அரிசி இருந்தது தெரியவந்தது.

அரிசி ஆலை அருகே குடோனுக்குள் ஆயிரக்கணக்கான ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. குடோனியில் பதுக்கி வைத்து ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்ததது அம்பலமானது.

எனவே, 200 டன் ரேஷன் அரிசி, குடோன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த 7 லாரிகளை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக குடோன் பணியார்கள், லாரி ஓட்டுநர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்