சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் வழங்க 200 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் வழங்க 200 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கமும், சுரங்கப்பாதை மற்றும் சாலைகளில் மழைநீர் நேக்கமும் உள்ளது. இந்த மழைநீரை வெளியேற்ற மாநகராட்சியின் சார்பில் போர்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த பணிகளில் மாநகராட்சி சார்பில் அனைத்து நிலைகளிலும் பணியில் உள்ள அலுவலர்கள், பணியாளர்கள் என மொத்தம் 23000 நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று (07:11.2021) சென்னையில் மழைநீர் தேங்கி உள்ள இடங்களை பார்யையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நிளாரன் உதவிகளை வழங்கினார். தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் wom வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப்பணி அளவிலான அலுவலர்களுடன் மாநகராட்சி ரிப்பன் கட்டிட மளாகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் உடனடியாக நீரை வெளியேற்றவும், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரன உதவிகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்கள்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்கவைப்பதற்காக 169 நிவாரன மையங்கள் தயார் நிலையில் உள்ளன. நிவாரன மையங்களில் தங்கவைக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்கான அனைத்து வசதிகளுடன் கூடிய சமையலறைகள் 15 இடங்களில் தயார் நிலையில் உள்ளன.
இன்று (08-112021) காலை நிலவரப்படி மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 889 நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரன முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரன முகாம்களில் தங்ங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மூன்று வோளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
நிவரன முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளபொதுமக்க மற்றும் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 07.112021 மதியம் இரவுமற்றும் 08.112021 காலை என இதுவரை 202,350 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பபட்ட பொதுமக்களுக்கு தேவையான உணவினை வழங்க வருவாய்த்துறையின் சார்பில் வரி வசூலிப்பவர் அல்லது உரிய ஆய்வாளர் 200 பேர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேளையும் சுமார் 150,000 நபர்களுக்கு வழங்ககூடிய அளவிற்கு உணவு சமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கினைத்து மழையால் பாதிக்கப்பபட்ட பொதுமக்களுக்கு தேவையான நிவாரன உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…