திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்ததாக கூறி, 40 குழந்தைகள் உள்ளிட்ட 200 பேர் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு விடுவிப்பு சான்றும், உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு 10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு தொழிலாளர்களுக்கு மருத்துவம் பார்த்ததாகக் கூறி, ஒடிசாவை சேர்ந்த பிரேம், ஆனந்த் என இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற செங்கல் சூளை உரிமையாளர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு சற்று வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உரிமையாளர் பேசுகையில், இங்கு வேலை பார்த்தவர்கள் அவர்கள் விருப்பத்துடன் வந்தவர்கள் எனவும், தங்கள் சுய லாபத்துக்காக கொத்தடிமைகள் என்று கூறி வருவாய்த் துறையினர் உதவியுடன் அழைத்துச் சென்றதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…