குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த விவகாரம்.! 20 பேர் நேரில் ஆஜராக சம்மன்.!
குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர், வேங்கைவயல் பகுதியில் 20 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை அடுத்து வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.
இந்த வேங்கைவயலில் 3 தரப்பு மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் 11 பேர் கொண்ட காவல்துறை குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் விரைவில் கைது செய்வோம் என காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர். தற்போது இறையூர், வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் 11 பேர் கொண்ட காவல்துறை குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.